நகை, ஆவணங்கள் திருட்டு


நகை, ஆவணங்கள் திருட்டு
x

நகை, ஆவணங்கள் திருடு போனது

மதுரை


மதுரை பை-பாஸ் ரோடு துரைசாமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 62). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டார். உடனே பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அதில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 12½ பவுன் நகை, வங்கி லாக்கர் சாவி மற்றும் சொத்து ஆவணங்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story