முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு


முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு
x

மத்தூர் அருகே முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு போனது.

கிருஷ்ணகிரி

மத்தூர்

மத்தூர் அருகே உள்ள சோனாரஅள்ளி கிராமத்தில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். உண்டியல் காணிக்கை எண்ணாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் கோவில் வழியாக சென்றனர்.

அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை, பணம், வெள்ளி ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து மத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story