வீட்டில் நகை, பணம் திருட்டு


வீட்டில் நகை, பணம் திருட்டு
x

நெல்லையில் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டையை அடுத்த திருமங்கைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 38). இவரது மனைவி ரதி (34). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் பீரோவில் இருந்த 13½ பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தினேஷ்பாபு பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Related Tags :
Next Story