ெபண்ணிடம் நகை திருட்டு
சிவகாசியில் பெண்ணிடம் நகையை திருடி சென்றனர்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி கிழக்கு பள்ளப்பட்டி இந்திரா காலனி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி விஜயலட்சுமி (வயது 52). இவர் சம்பவத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவுக்கு சென்று விட்டு அங்கிருந்து தனியார் பஸ் மூலம் சிவகாசிக்கு திரும்பி உள்ளார். பின்னர் சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு மினி பஸ்சில் சென்ற போது டிக்கெட் எடுக்க தனது பணப்பையை தேடிய போது அது மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, பணப்பையில் இருந்த 4½ பவுன் நகைகள் மற்றும் ரூ.5,500 ஆகியவை திருட்டு போனது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் பயணத்தின் போது மூதாட்டியிடம் இருந்து நகை, பணத்தை திருடி சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story