குடோன் பூட்டை உடைத்து தோல் பொருட்கள் திருட்டு


குடோன் பூட்டை உடைத்து தோல் பொருட்கள் திருட்டு
x

ஆம்பூர் அருகே குடோன் பூட்டை உடைத்து தோல் பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கீழ்கன்றாம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தோல் குடோனின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான தோல் பொருட்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது 25), முருகன் (வயது 41), மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த ஆஜூ பாஷா (வயது 45) ஆகியோர் குடோனின் பூட்டை உடைத்து தோல் பொருட்கள் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தோல் பொருட்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story