டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு
x

வெம்பக்கோட்டை டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு போனது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை செல்லையாபுரம் பகுதியில் டாஸ்மாக்கடை உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த பாபு (வயது 46) விற்பனையாளராகவும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சேகர் (48) என்பவர் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம் போல் அவர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் பாபு வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெம்பக்கோட்டை போலீசார் விரைந்து வந்தனர். கடையில் இருந்த ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள், ரூ.2,500 ஆகியவை திருட்டு போனதாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் சேகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story