கோவில் உண்டியலில் பணம் திருட்டு
கோவில் உண்டியலில் பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லி விலக்கிற்கு செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுத்தமல்லி யாதவர் தெருவை சேர்ந்த பிச்சாண்டி (வயது 65) என்பவர் நிர்வாக பொறுப்பாளராக இருந்து கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் நடையை சாத்திவிட்டு பூட்டிச் சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு திறந்த நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பிச்சாண்டி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீ்ன்குமார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்.
Related Tags :
Next Story