பூட்டிய வீட்டில் பணம் திருட்டு


பூட்டிய வீட்டில் பணம் திருட்டு
x

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவு பெரியவிளையை சேர்ந்தவர் சந்திரா (வயது55). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கு திருமணமான நிலையில் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று சந்திரா வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் மேல் தள கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே ெசன்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை.

இதையடுத்து வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு ெசய்த போது ஒரு வாலிபர் ஜன்னல் கம்பி வழியாக கதவை திறக்க முயலும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அந்த வாலிபர் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சந்திரா நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடைேய மர்ம நபர் கதவை திறக்க முயலும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story