மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருட்டு
மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடு போனது
நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவில் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவருடைய மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் மாயமாகி வந்தது. பெட்ரோல் எப்படி காலியாகிறது என்று தெரியாமல் ராஜசேகரனும் குழப்பத்தில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ராஜசேகரன் பார்வையிட்டார். அப்போது நேற்று முன்தினம் இரவு அவருடைய மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து நத்தம் போலீசில் அவர் இதுகுறித்து புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் மர்மநபர் பெட்ரோல் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி நத்தம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
---