குள்ளஞ்சாவடி அருகே வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு


குள்ளஞ்சாவடி அருகே வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு
x

குள்ளஞ்சாவடி அருகே வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு போனது.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

குள்ளஞ்சாவடி அருகே உள்ள கட்டியங்குப்பம் கிராமம் சத்திரம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சுரேஷ் மனைவி செல்வி(வயது 37). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அப்பியம்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.38 ஆயிரத்தை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story