விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு
கலசபாக்கம் அருகே விவசாயி வீட்டில் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த எர்ணாமங்கலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 62), விவசாயி. இவர், அதே பகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.
பின்னர் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்கமாக பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story