தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் திருட்டு
பேரணாம்பட்டில் தொழிலாளி வீட்டி வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
பீடி தொழிலாளி
பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள புதுவீதியில் வசித்து வருபவர் ஜொகாம்மா (வயது 60). பீடி தொழிலாளியான இவர் குடும்ப தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அரக்கோணத்தில் நடந்த தனது பேரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 1-ந்் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.
பின்னர் பேரணாம்பட்டிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது கதவை திறக்க முயன்ற போது கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. இதனால் பக்கத்து வீட்டின் வழியாக ஏறி வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.
ரூ.4 லட்சம் திருட்டு
அதில் வைத்திருந்த ரூ.3½ லட்சம் மற்றும் இரும்பு பெட்டியில் வைத்திந்த ரூ.50 ஆயிரம், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
கடந்த ஒரு வாரமாக வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நகை- பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஜொகாம்மா கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். மேலும் இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.