திங்கள்சந்தை அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.23 ஆயிரம் திருட்டு


திங்கள்சந்தை அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.23 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தை அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.23 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.23 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

உரக்கடை

திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் சாலையில் ஸ்ரீதர் (வயது48) என்பவர் உரக்கடை நடத்தி வருகிறார். மேலும் கடையில் செடிகளும் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடைைய திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மேஜையில் வைத்திருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டருக்கான இணையதள மோடம் ஆகியவற்றை காணவில்லை.

நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் இணையதள மோடத்தை திருடி சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஸ்ரீதர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உரக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story