தனியார் பள்ளியில் ரூ.25 ஆயிரம் திருட்டு
தனியார் பள்ளியில் ரூ.25 ஆயிரம் திருட்டு
கன்னியாகுமரி
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே உள்ள பியூலா நகர் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை வகுப்புகள் முடிந்ததும் நிர்வாகிகள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் வழக்கம்போல் நிர்வாகி டோவர் (வயது 49) பள்ளிக்கு வந்தார். அப்போது கதவுகள் உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அலுவலக அறையின் அலமாரியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம், 3 கேமராக்கள் மாயமாகி இருந்தன. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து டோவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story