மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு
தூத்துக்குடியில் மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் சிவந்தாகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் பேல் கடையை திறக்க சென்றாராம். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story