ரூ.50 ஆயிரம் பொருட்கள் திருட்டு
தகட்டூர் அரசு பள்ளியில் ரூ.50 ஆயிரம் பொருட்கள் திருட்டு
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேடு அருகே தகட்டூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று முன்தினம் அலுவலர்கள் வந்து பார்த்தபோது பள்ளியில் இருந்த ஸ்பீக்கர், மைக் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள பொருட்களை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் பள்ளியில் திருடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Related Tags :
Next Story