பத்திர விற்பனையாளரிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு
சுவாமிமலையில், பத்திர விற்பனையாளரிடம் ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:
சுவாமிமலையில், பத்திர விற்பனையாளரிடம் ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.60 ஆயிரம் திருட்டு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் அக்ரஹாரம் தெருைவ சேர்ந்தவர் சுந்தர்(வயது 60). இவர், சுவாமிமலை பகுதியில் பத்திரம் விற்பனை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி சுந்தர், பத்திர வியாபாரத்தை முடித்து விட்டு தனது சைக்கிளின் முன்புறம் உள்ள கூடையில் வெற்று பத்திரம் மற்றும் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சுவாமிமலையில் இருந்து பட்டீஸ்வரம் நோக்கி சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், சுந்தரின் சைக்கிளை முந்தி செல்வதுபோல சென்று, சுந்தர் சைக்கிளின் முன்புற கூடையில் வைத்து இருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் வெற்று பத்திரங்களை திருடி சென்று விட்டனர்.
போலீசில் புகார்
தனது கண் எதிரிலேயே பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதால் அதிர்ச்சி அடைந்த சுந்தர் இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சுவாமிமலை கடைவீதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் கபிஸ்தலம் மந்தக்கரை தெருவை சேர்ந்த செந்தில்ராம்குமார் (வயது 47), கோவிந்தகுடி கம்மாளர் தெருவை சேர்ந்த தனபால் மகன் குழந்தைவேலு(24), பட்டீஸ்வரம் நந்தமேடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் வெற்றி(34) என்பதும், இவர்கள் 3 பேரும் பத்திர விற்பனையாளர் சுந்தரிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தையும் வெற்று பத்திரத்தையும் திருடி சென்றதும் தெரிய வந்தது.
பணம்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்
இதைத்ெதாடா்ந்து போலீசார் செந்தில்ராம்குமாா், குழந்ைதவேலு, வெற்றி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயி்ரம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.