சேலம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.62 ஆயிரம் திருட்டு


சேலம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.62 ஆயிரம் திருட்டு
x

சேலம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.62 ஆயிரம் திருட்டு போனது.

சேலம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கோவைக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் பணம் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். அந்த பையில் ரூ.62 ஆயிரம் இருந்தது. பின்னர் பணம் திருட்டு போனது குறித்து பூமிநாதன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story