உழவு எந்திரம் திருட்டு; போலீசார் விசாரணை


உழவு எந்திரம் திருட்டு; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Feb 2023 12:01 AM IST (Updated: 10 Feb 2023 4:30 PM IST)
t-max-icont-min-icon

உழவு எந்திரம் திருட்டு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா, ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராசு (வயது 57). விவசாயியான இவர் அவரது வயலில் மினி உழவு எந்திரம் வைத்து உழவு பணியை மேற்கொண்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வயலில் நாற்றங்கால் உழவு பணியை முடித்துவிட்டு அங்கேயே உழவு எந்திரத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தி இருந்த உழவு எந்திரம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராசு இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான மினி உழவு எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க வலைவீசி தேடி வருகிறார்.


Next Story