கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு


கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு
x

கோவிலில் பூஜை பொருட்கள் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் மறக்குடியில் அதிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 2 குத்துவிளக்குகள், 3 பித்தளை பானைகள், சூடம் தட்டு மற்றும் பூஜை பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கலியாவூரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 64) என்பவர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூஜை பொருட்களை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story