தேனி அரசு ஆஸ்பத்திரியில்மருத்துவ பதிப்புகள் குறித்த பயிற்சி
தேனி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பதிப்புகள் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
சமூகம் சார்ந்த மருத்துவத்துறை சார்பில், மருத்துவ பதிப்புகள் குறித்த பயிற்சி வகுப்பு தேனி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்தது. இதற்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சமூகம் சார்ந்த மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் ராம் பிரபாகர் வரவேற்றார். பின்னர் பேசிய டாக்டர் மீனாட்சி சுந்தரம், மருத்துவ வெளியீடுகள் பற்றிய இந்த பயிற்சி வகுப்பு மருத்துவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த முகாம் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
இந்த பயிற்சி வகுப்பில் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தேனி மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பேராசிரியர் டாக்டர் சரண்யா நன்றி கூறினார்.