தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை டாக்டர்கள் நியமிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை


தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  ஆஞ்சியோகிராம் சிகிச்சை டாக்டர்கள் நியமிக்க வேண்டும்:  இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
x

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெருமாள், தபால் மற்றும் மின்னஞ்சல் வழியாக ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இதயவியல் சிகிச்சை பிரிவில், ஒரே ஒரு டாக்டர் தான் இருக்கிறார். உணவு முறை மாற்றத்தால் இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டாக்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன ஆய்வுக்கூடமான 'கேத்லேப்' இருந்தும் ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு தான் நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலை மாற தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இதயவியல் ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கான டாக்டர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story