தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு உடற்கூறியல் வகுப்பு


தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு உடற்கூறியல் வகுப்பு
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 5:40 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு உடற்கூறியல் வகுப்பு நடந்தது.

தேனி

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடற்கூறியல் துறையில் சிறப்பு வகுப்பு நடந்தது. இந்த வகுப்பில் இறந்தவர்களின் உடலை கொண்டு உடல் உறுப்புகள் குறித்த எடுத்து கூறப்பட்டது. அதன்பின்னர் உடற்கூறியில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட உறுப்புகளை மாணவர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து உடல் உறுப்புகளை பதப்படுத்தும் அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டு உடல் உறுப்புகளை பதப்படுத்தும் முறை, உடலில் உள்ள அனைத்து உறுப்புகள், எலும்புகள், மூட்டுகள், தசைநார்களை நேரடியாக காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மருத்துவக்கல்லூரி சிறப்பு இயக்குனர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.


Next Story