தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை


தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
x

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்

தேனி

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உப்பார்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளருமான மலைச்சாமி தலைமையில் பா.ஜ.க.வினர் வந்தனர். உப்பார்பட்டியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரியும், ஊராட்சி பகுதியில் 133 பயன்தரும் தென்னை மரங்களை வெட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏலம் விட்டதை ரத்து செய்து மக்கள் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 மணி நேரத்துக்கும் மேல் இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் உப்பார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் தென்னை மரங்களுக்கான ஏல அறிவிப்பை ரத்து செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த விவரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு கொடுத்தனர்.


Next Story