தேனியை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


தேனியை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Aug 2023 2:30 AM IST (Updated: 6 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தேனி

தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், தேனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் ரபீக், திண்டுக்கல், தேனி மண்டல செயலாளர் தமிழ்வாணன், மண்டல துணைச் செயலாளர் சுருளி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அணைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான இடங்கள் நிரம்பிய தேனி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பெரியகுளம் அருகே வவ்வால் துறை நீர்வீழ்ச்சி தண்ணீர் வீணாவதை தடுக்க அணை கட்ட வேண்டும். தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை அரசு கட்டமைப்பின்படி 4 வழிச்சாலையாக மாற்றுவதோடு, பராமரிப்பு மற்றும் முதலுதவி வாகனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யும் வரை உப்பார்பட்டி சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story