தேனியில் 4 மாதங்களுக்கு பிறகு 2 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
தேனி
தேனி மாவட்டத்தில் கடந்த 117 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த 4 மாத காலமாக தினமும் சராசரியாக 40-ல் இருந்து 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேனியில் 4 மாத இடைவெளிக்கு பிறகு இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 34 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட 2 பேரும் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story