அழகிய நம்பிராயர் கோவில் தெப்ப உற்சவம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
திருநெல்வேலி
ஏர்வாடி:
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி அழகியநம்பிக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நம்பி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டார். கோவில் முன்புள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை சுற்றி வந்து நம்பி சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story