அட்சயலிங்கசாமி கோவில் தெப்ப உற்சவம்


அட்சயலிங்கசாமி கோவில் தெப்ப உற்சவம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

நாகை அருகே கீழ்வேளூரில் சுந்தர குஜாம்பிகை சமேத அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா 1-ந் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

தெப்ப உற்சவம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாணசுந்தரர், அம்மன் எழுந்தருளினர். இதை தொடர்ந்து சரவண பொய்கை குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. குளத்தில் 3 முறை தெப்பம் வலம் வந்தது. இதில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அட்சயலிங்க சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story