குளித்தலையில் தெப்ப உற்சவம்


குளித்தலையில் தெப்ப உற்சவம்
x

பங்குனி உத்திரத்தையொட்டி குளித்தலையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

சிறப்பு அபிஷேக, ஆராதனை

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பரிசல்துறை சாலையில் ரெயில் நிலையம் அருகே அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இருந்து சாமி கொண்டுவரப்பட்டு தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி தெப்ப உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தெப்ப உற்சவத்தையொட்டி நேற்று அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இருந்து சாமிகள் குளித்தலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சாமிகள் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு ரெத்தினகிரீஸ்வரர் சாமி மற்றும் குளித்தலை கடம்பவனேசுவரர் சாமியின் சந்திப்பு நடைபெற்றது.

தெப்ப உற்சவம்

பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாமி கொண்டுவரப்பட்டு தெப்பக்குளத்தை அடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை தொடர்ந்து தெப்பகுளத்தில் சாமிகள் சுற்றிவந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது.

அப்போது தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள மண்டபத்தில் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மண்டபத்தில் இருந்து மீண்டும் சுவாமிகள் கொண்டுவரப்பட்டு தெப்பகுளக்கரையில் வைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் பலர் சாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்த தெப்ப உற்சவத்தை காண திரளான பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story