பெண்கள் கழிவறைக்குள் புகுந்த பட்டதாரி வாலிபரால் பரபரப்பு


பெண்கள் கழிவறைக்குள் புகுந்த பட்டதாரி வாலிபரால் பரபரப்பு
x

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் கழிவறைக்குள் புகுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் கழிவறைக்குள் புகுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தயா கேந்திரம் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று 30 வயதுைடய வாலிபர் ஒருவர் நுழைந்து அங்குள்ள பெண்கள் கழிவறை க்குள் புகுந்தார்.இதைப் பார்த்த கேந்திர நிர்வாகிகள் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த கேந்திர நிர்வாகிகள் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பட்டதாரி வாலிபர்

அப்போது அந்த வாலிபர் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்தநிலையில் நண்பர்களுடன் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது வழி தவறி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து அங்குள்ள தயா கேந்திரத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story