மளிகை கடைக்குள் புகுந்த சாரை பாம்பால் பரபரப்பு
மளிகை கடைக்குள் புகுந்த சாரை பாம்பால் பரபரப்பு
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்குள் இன்று மதியம் 12 மணிக்கு சுமார் 10 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதை கண்ட கடைக்காரர் பாபு அலறியடித்து கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்தார். கடைக்குள் நுழைந்த பாம்பு அங்குள்ள அலமாரிகளின் மேல் ஏறி பரணில் படுத்துக்கொண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்ட இளைஞர்கள் சிலர் கடைக்குள் சென்று பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டு வெளியே கொண்டு வந்தனர். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் பிடிபட்ட பாம்பை அவர்கள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
Related Tags :
Next Story