வேலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்துவதில் சிக்கல்


வேலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்துவதில் சிக்கல்
x

வேலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வேலூர்

காப்பீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் வேலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.காப்பீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் வேலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எருதுவிடும் திருவிழா

வேலூர் மாவட்டத்தில் பொங்கல்பண்டிகையையொட்டி எருது விடும் திருவிழா பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. விழாக்கள் நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெற்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 43 கிராமங்களுக்கு இம்மாதம் 28 -ந் தேதி வரை விழா நடத்த தேதி ஒதுக்கப்பட்டு, விழாக்கள் நடந்து வருகிறது. இதையடுத்து மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை பல்வேறு கிராமங்களில் விழாக்கள் நடத்துவதற்கும் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த கிராமங்களில் எருது விடும் திருவிழாக்கள் நடத்துவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

காப்பீடு பிரச்சினை

எருது விடும் திருவிழா நடத்துவதற்கு விழாக்குழுவினர் முன்கூட்டியே காப்பீடு செய்திருக்க வேண்டும். சுமார் ரூ.12 ஆயிரம் வரை காப்பீடு பெற்றால் மட்டுமே விழா நடத்த அனுமதிக்கப்படும். ஆனால் மார்ச் மாதத்துக்கு விழாக்கள் நடத்தும் விழாக்குழுவினர் காப்பீடு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த விழா தொடர்பாக காப்பீடு செய்து வந்த காப்பீடு நிறுவனம் திடீரென காப்பீடு செய்ய முன் வர தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. உயிர்பலி உள்ளிட்ட இழப்புகள் ஏற்படுவதால், அதற்கான இழப்பீடு தொகை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை காப்பீடு நிறுவனத்துக்கு ஏற்படுகிறது. எனவே அதன் காரணமாக காப்பீடு செய்ய காப்பீடு நிறுவனம் தயக்கம் காட்டி வருவதாக அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் சுமார் மார்ச், ஏப்ரல் மாதத்தில் விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ள சுமார் 30 கிராமத்தை சேர்ந்த விழாக்குழுவினர் காப்பீடு பெற முடியாமல் கவலை அடைந்துள்ளனர். இதனால் அங்கு விழாக்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

30 கிராமங்களில்...

அதேவேளையில் காப்பீடுக்கு மாற்றாக ரூ.20 லட்சத்துக்கு வங்கியில் முன்பணம்செலுத்தி உத்தரவாதம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விழாக்குழுவினர் ரூ.20 லட்சம் தொகையை ஏற்பாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேறு மாவட்டத்தில் உள்ள காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்துள்ள சுமார் 30 கிராமங்களில் விழாக்கள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அரசு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Next Story