நந்திகேஸ்வரர் மண்டபத்தை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறையில் நந்திகேஸ்வரர் மண்டபத்தை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் நந்திகேஸ்வரர் மண்டபத்தை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுநீர்
மயிலாடுதுறையில் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி புஷ்கர விழா நடந்தது. இந்த விழாவிற்காக துலா கட்ட காவிரி ஆற்றின் மையப்பகுதியில் உள்ள நந்திகேஸ்வரர் மண்டபத்தை சுற்றி சிமெண்டு தொட்டி கட்டப்பட்டது. தற்போது மயிலாடுதுறை நகரில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் நந்திகேஸ்வரர் மைய மண்டபத்தை சுற்றி சாக்கடை நீர் கலந்து சேறும் சகதியுமாக குட்டை போல காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி மையமாக இருக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொட்டியில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மணல் கொண்டு மூட வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கங்கை நதிக்கு இணையாக புகழப்படும் காவிரி துலா கட்டத்தில் காவிரி புஷ்கர விழாவின் போது பக்தர்கள் நீராடுவதற்காக சிமெண்டு தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த சிமெண்டு தொட்டியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த தொட்டியை மணல் கொண்டு மூட வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.