குன்னூர் அருகே இயேசுவின் 'சொரூபத்தில்' இருந்து எண்ணெய் வடிந்ததாக பரபரப்பு
குன்னூர் அருகே இயேசுவின் ‘சொரூபத்தில்’ இருந்து எண்ணெய் வடிந்ததாக பரபரப்பு
நீலகிரி
குன்னூர்
குன்னூர் அருகே கீழ்பாரத் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரெஜினா இம்மானுேவல். இவரது வீட்டில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. இந்த சொரூபத்திலிருந்து எண்ணெய் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று, இயேசுவின் சொரூபத்தை பார்த்து சென்றனர். இதுகுறித்து ரெஜினா இம்மானுவேலின் மூத்த மகள் மேரி ஸ்டெல்லா கூறியதாவது:- நாங்கள் இயேசு நாதரை சிலுவையில் அறைந்த சொரூபத்தை கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் வைத்துள்ளோம். இந்த சொரூபத்திற்கு தினசரி மாலை வேளையில் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வருகிறோம். திடீரென்று இயேசு சொரூபத்தில் இருந்து எண்ணெய் வடிந்தது. இதுபற்றி அறிந்ததும் பொதுமக்கள் எனது வீட்டிற்கு வந்து இந்த காட்சியை பார்த்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story