தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் 11 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை


தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் 11 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை
x
தினத்தந்தி 20 Aug 2023 12:45 AM IST (Updated: 20 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் 11 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி தவிக்கிறார்கள்.

நாகப்பட்டினம்

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் 11 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி தவிக்கிறார்கள்.

குடிநீர் பற்றாக்குறை

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தலைஞாயிறு பேரூராட்சிக்கு ஒவ்வொரு நாளும் 15 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. ஆனால் தற்போது 4 லட்சம் குடிநீர் மட்டுமே வருகிறது. 11 லட்சம் குடிநீர் பற்றாக்குறை நீடிப்பதால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகிறார்கள்.

பொதுமக்கள் புகார்

எனவே குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் முழு கொள்ளளவு குடிநீர் வழங்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக குடிநீர் கிடைக்கும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

டேங்கர் லாரி மூலம் வினியோகம்

குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பேரூராட்சி பகுதியில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன், செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி வேளாணிமுந்தல், பழையாற்றங்கரை, லிங்கத்தடி, ஓரடியம்பலம் ஜீவாநகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story