உண்டு, உறைவிடப் பள்ளி தொடக்க விழா


உண்டு, உறைவிடப் பள்ளி தொடக்க விழா
x

உண்டு, உறைவிடப் பள்ளி தொடக்க விழா நடந்தது.

ராணிப்பேட்டை

ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள மை ஸ்கூல் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மாதிரி பள்ளி (உண்டு உறைவிட பள்ளி) தொடக்க விழா மற்றும் பள்ளியில் பயில மாணவ மாணவியர்களுக்கு தேவையான விடுதி உபயோக அனைத்து பொருட்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள், போர்வை, வாளி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன் (ஆற்காடு) எஸ்.அசோக் (திமிரி), துணைத் தலைவர் ரமேஷ்( திமிரி), உதவி திட்ட அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் நன்றி கூறினார்.


Next Story