இ-டெண்டரில் கட்சி தலையீடு இருக்கக்கூடாது
இ-டெண்டரில் கட்சி தலையீடு இருக்கக்கூடாது என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினா்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரப்பட்டிணம் சுரேஷ், கோமங்கலம் வீரபாண்டியன், விளாங்காட்டூர் பாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கான இ-டெண்டரை ஒன்றிய அளவில் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, ஒன்றிய அளவில் நடைபெறும் இ-டெண்டரில் கட்சி தலையீடு இருக்கக்கூடாது, ஊராட்சிகள் சட்டத்தின் படி நடத்த வேண்டும், ஊராட்சி மன்ற தலைவர்கள் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தீர்மான நகல் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் (திட்டம்) சங்கரிடம் கொடுக்கப்பட்டது.