தறிகெட்டு ஓடிய லாரி வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு


தறிகெட்டு ஓடிய லாரி வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு
x

தொப்பூர் கணவாயில் தறிகெட்டு ஓடிய லாரி வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி

தொப்பூர் கணவாயில் தறிகெட்டு ஓடிய லாரி வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

தறிகெட்டு ஓடிய லாரி

கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் இருந்து பெருந்துறைக்கு இரும்பு காயில் ரோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும் சிமெண்டு லோடு ஏற்றி சென்ற லாரி மீது மோதியது.

5 பேர் காயம்

இந்த விபத்தில் காயில் ரோல் லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் சிவராஜ் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். கார்களில் வந்த 4 பேரும் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், தர்மபுரி தீயணைப்பு துறையினர், சுங்கசாவடி ரோந்து படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்த டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4 பேரும் வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்்புறப்படுத்தினர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.


Next Story