திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் இன்று நடந்தது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதன்படி, பள்ளப்பட்டி ஊராட்சி கொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திண்டுக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர்களின் சங்க கூட்டுக்குழு சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி சமூக விரோதிகள் சிலர் பணம் பறிக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மண்எண்ணெய் கேன்

இதற்கிடையே கையில் பையுடன் 45 வயது மதிக்கக்கத்தக்க ஒருவர் தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அப்போது அதில் மண்எண்ணெய் கேன் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அதனை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ரெட்டியார்சத்திரத்தை அடுத்த கே.புதுக்கோட்டையை சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே வண்டிப்பாதை அமைக்க வந்த அதிகாரிகளை சிலர் தடுப்பதாகவும், அதற்காக மனு கொடுத்ததற்காக என்னையும் எனது குடும்பத்தினரையும் சிலர் மிரட்டுகின்றனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நான் குடும்பத்துடன் தற்கொலை செய்ய நினைத்து கலெக்டர் அலுவலகம் வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

220 மனுக்கள்

நேற்று நடந்த கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட 220 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story