ஓடும் பஸ்சில் ஏற்பட்ட தீப்பொறியால் பரபரப்பு


ஓடும் பஸ்சில் ஏற்பட்ட தீப்பொறியால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Aug 2023 1:00 AM IST (Updated: 22 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் ஓடும் பஸ்சில் தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

பழனியில் இருந்து ஆயக்குடி வழியே வேப்பன்வலசு கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் ஆயக்குடி, அமரபூண்டி சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். அதன்படி நேற்று வழக்கம்போல் மதியம் 1.20 மணி அளவில் பழனி பஸ்நிலையத்தில் இருந்து வேப்பன்வலசுக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் ஆண்கள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

பழனி-திண்டுக்கல் ரோட்டில் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து தீப்பொறி வந்தது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது, பயணிகள் என்னவென்று டிரைவரிடம் கேட்டபோது, தீப்பொறி வந்ததாக கூறினார். அதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கினர். இதற்கிடையே போக்குவரத்து கழக அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், தொழில்நுட்ப பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ்சில் சோதனை செய்தபோது, பேட்டரி பகுதியில் உள்ள வயர்கள் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அதில் அனுப்பி வைக்கப்பட்டனர். பழனியில் ஓடும் பஸ்சில் தீப்பொறி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story