அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ரகளை நடு வழியில் பஸ்சை டிரைவர் நிறுத்தியதால் பரபரப்பு
அணைக்கட்டு
பள்ளிகொண்டா அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் நடுவழியில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். போலீசார் சமரசப்படுத்தி பஸ்சை இயக்க செய்தனர்.
பஸ்சில் ரகளை
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா, அகரம்சேரி வழியாக ஒடுகத்தூருக்கு தடம் எண் 17 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் 6 முறை இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவுிகள், பொதுமக்கள் பயணிக்கின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் நெரிசலுடன் அவர்கள் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பள்ளிக்குப்பம் அருகே சென்றபோது பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் அமர்ந்து கூச்சலிட்டவாரும் ரகளையில் ஈடுபட்டனர்.
பஸ்ஸில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் தொடர்ந்து ரகளை செய்ததால் நடுவழியில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
போலீசார் விரைவு
மாணவர்களை மேலே வருமாறு கண்டக்டர் கூறியபோது அவரை கல்லூரி மாணவர்கள் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.உடனடியாக பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பஸ்சில் பயணம் செய்தகல்லூரி மாணவர்களை கண்டித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அதன்பின் பஸ்சை இயக்குமாறு கூறினார். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சென்றவுடன் மீண்டும் கல்லூரி மாணவர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டது பயணிகளை வேதனையடைய செய்தது.
தினமும் கல்லூரி மாணவர்கள் இவ்வாறு கூச்சலிட்டவாறும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்த கொள்கின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் இது போன்று தொடர்ந்து நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் ேகாரிக்கை விடுத்தனர்.