மதுபாட்டிலில் பூச்சி கிடந்ததால் பரபரப்பு


மதுபாட்டிலில் பூச்சி கிடந்ததால் பரபரப்பு
x

கோபியில் வாங்கிய மதுபாட்டிலில் பூச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

கோபி

கோபியில் வாங்கிய மதுபாட்டிலில் பூச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுபாட்டிலுக்குள் பூச்சி

கோபி பச்சைமலையை சேர்ந்தவர் குப்புராஜ். இவர் நேற்று கோபி பாரியூர் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்று குவார்ட்டர் மதுபாட்டில் வாங்கினார். பின்னர் மதுகுடிக்க அவர் சென்றபோது பாட்டிலை பார்த்தார். அப்போது பாட்டிலுக்குள் பூச்சி ஒன்று செத்து கிடந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பாட்டிலை திறக்காமலேயே மதுக்கடைக்கு சென்று அங்குள்ள விற்பனையாளரிடம், 'பாட்டிலுக்குள் பூச்சி செத்து கிடக்கிறது. இதை நான் கவனிக்காமல் குடித்துவிட்டால் என்ன ஆவது?. அதுவும் விஷப்பூச்சியாக இருந்தால் உயிர்போய்விடுமே' என்று ஆவேசமாக கேட்டுள்ளார். அதற்கு கடையில் இருந்த விற்பனையாளர்கள் இதுபற்றி எங்களுக்கு தெரியாது' என்று பதில் கூறி மழுப்பிவிட்டதாக தெரிகிறது.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார்

இதையடுத்து குப்புராஜ் இதுகுறித்து புகார் அளிக்க கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றார். அப்போது ஆர்.டி.ஓ. இல்லாததால் அங்கிருந்த அதிகாரியிடம் பூச்சி கிடந்த மதுபாட்டிலை காட்டி புகார் மனுவையும் அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இந்த மனுவை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறேன் என்று குப்புராஜை அனுப்பிவைத்தார்.

அலுவலகத்தை விட்டு வௌியே வந்த குப்புராஜ் மீண்டும் மதுக்கடைக்கு சென்று, அங்கு மதுவாங்க வந்த குடிமகன்களிடம் மதுபாட்டிலை வாங்கியதும் குடித்துவிடாதீர்கள். பாட்டிலுக்குள் எதாவது கிடக்கிறதா? என்று கவனியுங்கள் என்றார். பாட்டிலுக்குள் பூச்சி கிடப்பதை பார்த்த மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story