இலங்கை முகவரியுடன் கிடந்த மூட்டையால் பரபரப்பு


இலங்கை முகவரியுடன் கிடந்த மூட்டையால் பரபரப்பு
x

நாகை புதிய பஸ் நிலையத்தில் இலங்கை முகவரியுடன் கிடந்த மூட்டையால் பரபரப்பு ஏற்பட்டது

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை புதிய பஸ் நிலையத்தில் பட்டுக்கோட்டை, தூத்துக்குடி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் நீண்ட நேரமாக பிளாஸ்டிக் மூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த மூட்டையின் வெளிப்புறத்தில் வேதாரண்யம் தோப்புத்துறையை சேர்ந்த ஒருவரது முகவரியும், பெறுனர் முல்லைத்தீவு, இலங்கை என்ற முகவரியும் எழுதப்பட்டு இருந்தது. இந்த மூட்டையை பார்த்து அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்ததுடன் இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் மட்டுமே இருந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். இந்த மூட்டையை பஸ் நிலையத்தில் வைத்து சென்றது யார்? என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த புதிய பஸ் நிலையத்தில் மூட்டை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story