இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிக பெரிய போராட்டம் நடைபெறும்


இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிக பெரிய போராட்டம் நடைபெறும்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிக பெரிய போராட்டம் நடைபெறும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்ெமாழி கூறினார்.

திருவண்ணாமலை

10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்ெமாழி கூறினார்.

நேர்காணல்

திருவண்ணாமலை தெற்கு மேற்கு மாவட்ட வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்ப மனு பெறுவதற்கான நேர்காணல் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி, தெற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி, மேற்கு மாவட்ட நிர்வாகி ஆர்.ஜெய்சங்கர், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி கலந்து கொண்டு போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுவினை பெற்று கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி

ஒவ்வொரு தேர்தலிலும் வன்னியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்ற அடிப்படையில் தான் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என மாறி மாறி பா.ம.க. கூட்டணி அமைத்து வந்தது.

ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.

இனிமேல் நாம் யாருடனும் கூட்டணி வைக்கபோவது இல்லை. வன்னியர்களின் வாக்குகள் தேவைபடுவோர் நம்மிடம் கூட்டணி வைக்கட்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் தீவிரவாதம் அதிகரித்து விட்டது.

இடஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை நடத்த பா.ம.க. விரும்பவில்லை. இந்தியாவில் கடந்த காலத்தில் மாநில பிரிப்பிற்காக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று உள்ளது.

மிகப்பெரிய போராட்டம்

அந்த வகையில் வன்னியர்களுக்காக தனி மாநிலம் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வாழ்வாதரத்திற்கு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தருவோம் என்று சொல்லி இருக்கிறார். ஒரு வேளை இது நடைபெறவில்லை என்றால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிக பெரிய போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தனர். முடிவில் வன்னியர் சங்க மேற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.


Next Story