ஆனையூர், இலந்தைகுளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஆனையூர், இலந்தைகுளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆனையூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்கநகர் 1 முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக்நகர், புதுவிளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ்.காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி மற்றும் எதிர்புறம், பழையவிளாங்குடி, சக்திநகர், துளசிவீதி, திண்டுக்கல் மெயின்ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி மையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி பிரிவு, லெட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராஜாஉசேன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இலந்தைகுளம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புபணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீராம்நகர் முழுவதும், கருணை சபை, உத்தங்குடி ஊருணி பகுதி, முத்தையாநகர், அரசு நடுநிலைப்பள்ளி, உத்தங்குடி எதிர்புறம் பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.