குளத்துப்பாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
குளத்துப்பாளையம் பகுதியில் மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர்
நொய்யல் துணைமின் நிலையத்திற்குட்பட்ட அத்திபாளையம் பீடர், ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட குடிநீர் பீடர் ஆகிய பீடர்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் குளத்துப்பாளையம், வலையாபாளையம் செல்வம் நகர் காலனி, இந்திராநகர் காலனி, ஏ.கே.புதூர், அத்திபாளையம், க.பரமத்தி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமிய மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story