மலைக்கோவிலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
மலைக்கோவிலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர்
மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலைக்கோவிலூர், செல்லிப்பாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காபட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story