கவர்னர் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்


கவர்னர் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்
x

கவர்னர் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என முத்தரசன் கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம்,


கவர்னர் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என முத்தரசன் கூறினார்.

பொதுக்கூட்டம்

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லிங்கம் வரவேற்றார்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜ், எம். எல்.ஏ.க்கள், தங்கப்பாண்டியன், சீனிவாசன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு அடிப்படை காரணம் மத்திய அரசின் தவறான கொள்கை தான். இதை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

ஆட்சிக்கு ெநருக்கடி

மாநிலத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. மாநிலங்களில் கவர்னரை பயன்படுத்தி ஆட்சிக்கு எதிராக பிரச்சினையை உருவாக்குகின்றனர். கவர்னரை பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதுடன், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கையெழுத்து போடாமல் கிடப்பில் போட்டு வைப்பது போன்ற செயல்களில் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.

யார் அமைச்சராக இருப்பது, யார் இருக்கக் கூடாது என்பதை தீர்மானிப்பது மாநிலத்தின் முதல்-அமைச்சர் தான். ஆனால் இன்றைய நிலையில் அதை கவர்னர் கூறுகிறார். எனவே ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்காக போராட வேண்டி உள்ளது.

போராட்டம்

மணிப்பூரில் கலவரம் நடைபெற்று வருகிறது. எண்ணற்ற மக்கள் உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக இருந்து வருகின்றனர். இதற்கு யார் காரணம். பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருகிற 9-ந் தேதி தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் அந்தந்த மாவட்டத்தில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல வாரியம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்தும் திட்டத்திற்கு தற்போது வழங்கப்படும் நிதியை கூடுதலாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story