ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்பை கொண்டு வந்தனர்


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்பை கொண்டு வந்தனர்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்பை கொண்டு வந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள நல்லாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி வள்ளி (வயது 54). இவர் நேற்று காலை தனது வயலில் கதிர் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் காலில் ஏதோ ஒன்று கடித்தது போன்று உணர்ந்தார். உடனடியாக கால் பகுதியில் கீழே பார்த்தபோது 2 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த வள்ளி கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து பாம்பை அடித்தனர். இதில் மயக்கமடைந்த வள்ளியை உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் சிகிச்சை அளிக்க ஏதுவாக வரும்போதே வள்ளியை கடித்த கட்டுவிரியன் பாம்பையும் உறவினர்கள் பையில் போட்டு எடுத்து வந்தனர். அது எந்த வகையான பாம்பு என்பதை அறிந்து டாக்டர்கள் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க ஏதுவாக கொண்டு வந்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வள்ளிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story