தியாகராஜர் 176-வது ஆராதனை விழா


தியாகராஜர் 176-வது ஆராதனை விழா
x

தியாகராஜர் 176-வது ஆராதனை விழா

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 176-வது ஆராதனை விழா ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது. விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசைசவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

தியாகராஜர் ஆராதனை விழா

தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணாக 2 நாட்கள் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெறுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

பஞ்சரத்ன கீர்த்தனைகள்

தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 11-ந் தேதி(புதன்கிழமை) தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

இதற்காக நேற்று காலை, பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பந்தக்கால்முகூர்த்தம் நடைபெற்றது. பந்தக்கால் நடும் விழா தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில், அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ்மூப்பனார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அறங்காவலர்கள் கணேசன், பஞ்சநதம், டெக்கான்மூர்த்தி, சுந்தரம், காரியதரிசிகள் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், உதவி செயலளர்க்ள கோவிந்தராஜன், அருண், பாபநாசம், அசோக்மணி, ராஜகோபாலன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜி.கே.வாசன் எம்.பி. பேட்டி

பின்னர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ஜனவரி 6-ந் தேதி மாலை 5 மணிக்கு புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், 11-ந் தேதி காலை நடைபெறும் தியாகராஜர் பஞ்ச ரத்ன கீர்த்தனை விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் கலந்து கொள்கின்றனர்.

இசை ஆர்வலர்கள் பலரும் பாடுவதற்காக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த ஆண்டு விழா 5 நாட்களுக்கு பதிலாக ஒரு நாள் கூடுதலாக 6 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story